மாநிலம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலானதால் வெறிச்சோடியது தமிழகம் - சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி

Jul 5 2020 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் முக்‍கிய சாலைகள் வெறிச்சோடின.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சாலைகளில் பொதுமக்‍கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலையான ஜிஎஸ்டி சாலை வாகன நடமாட்டமின்றி காணப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே விற்பனைக்‍கு அனுமதிக்கப்பட்டுள்ளன. தேவையின்றி சாலையில் வருபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். உணவகங்கள், இறைச்சிக் கடைகள், காய்கறி கடைகள், சந்தைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

திருச்சியில் முழு ஊரடங்கு காரணமாக சோதனைச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்‍கைகள் மற்றும் காவல்துறையினரின் கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து, திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளிலேயே சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்‍கிளில் சென்ற அவர், திருச்சி ஏர்போர்ட் சோதனைச்சாவடி, எம்ஐடி, மாத்தூர் சோதனைச் சாவடிகளில் ஆய்வு செய்தார்.

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநகர சாலைகள் அனைத்தும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடின. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மட்டுமே சென்றன.

ராமநாதபுரத்தில் அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் முக்‍கிய வீதிகள் வெறிச்சோடின. போக்‍குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால் மக்‍கள் நடமாட்டம் இல்லை. ஞாயிற்றுக்கிழமையான இன்று கறிக்‍கடைகள், மீன் சந்தைகள் அடைக்‍கப்பட்டுள்ளதால் நகரமே வெறிச்சோடியது.

சேலத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சிக் கடைகளுக்கு சீல் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 110 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன. 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்‍கப்பட்டது.

திண்டுக்கல்லில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை திறக்கப்படாமல் மாநகர் முழுவதும் அமைதி நிலவுகிறது. உரிய காரணமின்றி இருசக்‍கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 12 இருசக்‍கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடைபயிற்சி சென்றவர்களை தடுத்து நிறுத்தி அறிவுறுத்தினர்.

திருப்பூரில் ஆயிரத்து 500 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு ஆடை தயாரிப்பு பனியன் நிறுவனங்கள், மளிகை, காய்கறி, பழக்கடைகள், பேக்கரி, உணவகங்கள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளன. அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துமின்மையால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடின.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00