தம்மம்பட்டியில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களுக்கு, மத்திய அரசின் புவிசார் குறியீடு - மரசிற்பக் கலைஞர்கள் மகிழ்ச்சி

Jul 3 2020 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களுக்கு, மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் சிற்பக் கலைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆத்தூர் அருகேயுள்ள தம்மம்பட்டி காந்தி நகரில், சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மரச்சிற்ப சிலை வடிவமைப்பு தொழில் செய்து வருகின்றனர். தூங்கவாகை, தேக்கு, மாவிலங்கு, இலுப்பை, அத்தி உள்ளிட்ட மரங்களில் வடிவமைக்கப்படும் மரச்சிற்பங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. கலை நயமிக்க இந்த மரச்சிற்பங்கள் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தம்மம்பட்டி மரச்சிற்பத்திற்கு புவிசார் குறியீடு வழங்கக்கோரி, கடந்த 2012ல் விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு, தம்மம்பட்டி மரச்சிற்பத்துக்கு புவிசார் குறியீடு வழங்கி அதற்கான உத்தரவை அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து புவிசார் குறியீடு பெறும் 36ஆவது பொருளாக, தம்மம்பட்டி மரச்சிற்பம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், போலிகள் உருவாவதை தவிர்த்து, தரமான சிலைகளை வாங்க முடியும் என மரச்சிற்ப கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00