புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை - இளைஞரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை

Jul 2 2020 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டையில் காணாமல் போன 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்தவர் நாகூரான், இவர்களது 7 வயது மகள் கடந்த செவ்வாய் கிழமை முதல் காணவில்லை என்று ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பதிவு செய்த போலலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கருவேல மரங்கள் அடர்ந்த இடத்தில் காணாமல் போன சிறுமி சடலமாக கிடப்பது கண்டறியப்பட்டது. மேலும் சிறுமி உடலில் கால் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளதும் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியை தேடும் பணி நடந்தது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் கடை வைத்துள்ள 27 வயது இளைஞன் ஒருவரை பிடித்து போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்பொழுது அந்த இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00