என்.எல்.சி அனல்மின்நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த பரிதாபம் - உரிய விசாரணை நடத்தப்படும் என தலைமை பொது மேலாளர் உறுதி

Jul 2 2020 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
நெய்வேலி தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்‍கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பான முடிவு எட்டும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், NLC முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் உள்ள கொதிகலனில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேரும் சிகிச்சை பலனின்றி ஒருவரும் என 7 பேர் பலியானார்கள். மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் நெய்வேலி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தீ விபத்தைத் தொடர்ந்து இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து இரண்டாவது அனல்மின் நிலைய முதன்மை மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடைய, தீ விபத்து குறித்து என்.டி.சி.சி.யின் ஓய்வு பெற்ற தொழில்நுட்ப இயக்குநர் மொகாபத்ரா தலைமையில் உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என என்.எல்.சி நிர்வாகத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.குருசுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெய்வேலி தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்‍கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பான முடிவு எட்டும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், NLC முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00