சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இடியுடன் மழை - ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது

Jul 2 2020 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது.

வெப்பச்சலனம் காரணமாக வடகடலோர மாவட்டங்கள், கோயம்புத்தூர், தர்மபுரி, சேலம், புதுச்சேரி மற்றும் காரைக்‍கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்‍கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அனகாபுத்தூர், பம்மல், ஆலந்தூர் நங்கநல்லூர், பழவந்தங்கள், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக மழை பெய்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. காஞ்சிபுரத்தில் 25 மில்லிமீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 7 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, ஜூலை 5ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில், மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுக்‍ கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்‍குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00