சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கில் 10 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை - சி.பி.ஐ. விசாரணைக்கு முன்னதாகவே விசாரணையை முடிக்‍க திட்டம் எனத் தகவல்

Jul 1 2020 4:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் இரட்டை மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 10 குழுக்களாக பிரிந்து விசாரணையை தொடங்கியுள்ள சிபிசிஐடி போலீசார், சி.பி.ஐ. விசாரணைக்கு முன்னதாகவே விசாரணையை முடித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் அறிக்‍கை தாக்‍கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசாருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாக தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை, இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் திரு. அனில்குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, சிபிசிஐடி ஐ.ஜி. திரு.சங்கர், காவல்துறை கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உட்பட 9 மாவட்டங்களை சேர்ந்த சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்கினர். 3 டி.எஸ்.பி., 10 இன்ஸ்பெக்‍டர் உட்பட 40 போலீசார், 10 குழுக்‍களாகப் பிரிந்து, சம்பவத்தில் பாதிக்‍கப்பட்டவர்கள், கோவில்பட்டி கிளைச்சிறை, மருத்துவமனை மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாட்சியங்கள் அழிக்‍கப்பட வாய்ப்பு இருப்பதால், சி.பி.ஐ விசாரணக்‍கு முன்னதாக விசாரணையை முடித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் அறிக்‍கை தாக்‍கல் செய்யவுள்ளதாக சி.பி.சிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00