தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு அ.ம.மு.க. சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்

Jun 4 2020 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆலோசனைப்படி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சலவை தொழிலாளர்கள் 250 குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நல உதவிகளை திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆலப்பாக்கம் திரு. E.ஜீவானந்தம் வழங்கினார். அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. குட்வில் குமார், செய்தி தொடர்பாளர் திரு. இளந்தமிழ் ஆர்வலன், உள்ளிட்டோர் பங்கேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட அமமுக சார்பில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சுமார் ஆயிரம் பேருக்கான முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு. பொய்கை மாரியப்பன் வழங்கினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் திரு. இசக்கிமுத்து, திரு. பேச்சிமுத்து ஏற்பட்டின் பேரில் டேவிஸபுரம் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி போன்றவைகளை வடக்கு மாவட்ட செயலாளர் திரு. சிவபெருமான் வழங்கினார்.

விருதுநகர் கிழக்கு மாவட்டம் விருதுநகர் மேற்கு ஒன்றியம் RR.நகர் கிளை கழகம் சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசங்களை மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. PRC.ஆறுமுகம் வழங்கினார்.

இதேபோல், விருதுநகர் மேற்கு மாவட்ட அமமுக சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மல்லி. முள்ளிக்குளம். உள்ளூர்பட்டி ஆகிய பகுதிகளில் 150 பேருக்கு தலா 5 கிலோ அரிசி பையினை மேற்கு மாவட்ட செயலாளர் திரு.கே.காளிமுத்து வழங்கினார்.

அதனை தொடர்ந்து, விருதுநகர் மேற்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் பகுதியில் 150 ஏழை எளிய பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசி பையினை மேற்கு மாவட்ட செயலாளர் திரு.கே. காளிமுத்து வழங்கினார்.

விருதுநகர் மத்திய மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஏழை எளிய பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு தலா 5 கிலோ அரிசி கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு. G. சாமிக்காளை வழங்கினார். கழக நிர்வாகிகள் உடனிருந்து நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

விருதுநகர் மேற்கு மாவட்டம் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. ஜான்சன் ஏற்பாட்டின் பேரில், தளவாய்புரம் ஒன்றிய கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 60 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி பையினை, மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.கே.காளிமுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர்கள் செல்வக்கனி. காமாட்சி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில், பாளையங்கோட்டையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 78 இளைஞர்களுக்கு, தலா 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனை, நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. பரமசிவ ஐயப்பன் வழங்கினார். நெல்லை மாநகர மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு. பொன்னுசாமி., நெல்லை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00