சிறைக்‍ கைதிகளுக்‍கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை விவரம் என்ன? - ஒரு வார காலத்திற்குள் அறிக்‍கை தாக்‍கல் செய்ய தமிழக அரசுக்‍கு நீதிபதிகள் உத்தரவு

Jun 2 2020 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சரவணன் என்பவருக்கு ஆறு வாரம் பரோல் கேட்டு அவருடைய மனைவி சங்கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு.கிருபாகரன் மற்றும் நீதிபதி திருமதி ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தற்போது சிறைகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், சிறைக்கைதி சரவணனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக சிறைகளில் இதுவரை எத்தனை கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது? எத்தனை கைதிகளுக்கு எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறித்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00