கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது : சென்னை உயர்நீதிமன்றம்

May 31 2020 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு, நாளொன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு, மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி, நாட்டுப்படகுகளை நிபந்தனைகளுடன் இயக்க அனுமதிக்கக்கோரி, மீனவர்கள் நல பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த மனுவில், ஊரடங்கு காலத்தில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் திரு. சத்தியநாராயணன் மற்றும் திருமதி அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், கொரோனா வைரஸ் பரவலால் மீனவர்கள் சமுதாயம் மட்டும் பாதிக்கப்படவில்லை எனவும், அவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க இயலாது என்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , மீன்பிடி தடை காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் 83 கோடியே 55 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக, 13 கடலோர மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், மீனவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, வழக்கை முடித்து வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00