நாளை முதல் நீதிமன்றத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்‍கலாம் - நீதிபதிகளுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

May 31 2020 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் முக்கியமான வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி திரு. ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்‍கூட்டத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அறையிலோ, நீதிபதிகளின் அறையிலோ வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரைக் கிளையை பொறுத்தவரை, வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிப்பதுடன், அரசுத்தரப்பு வழக்கறிஞருடன் சேர்த்து ஐந்து வழக்கறிஞர்களை மட்டும் அனுமதித்து நீதிமன்ற அறையிலும் வழக்குகளை விசாரிக்கலாம் என அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளும், நீதிமன்ற அறையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், 5 வழக்கறிஞர்களை மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும், வழக்கு தொடர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அறைகளில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு பின் இந்த நடைமுறை மறு ஆய்வு செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00