சென்னையில் ராயபுரம், தேனாம்பேட்டை உள்ளிட்ட 6 மண்டலங்களிலும் ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று - நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம்

May 28 2020 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 252 பேர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 12 ஆயிரத்து 203 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், 6 மண்டலங்களில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 2 ஆயிரத்து 252 பேர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக, கோடம்பாக்‍கத்தில் ஆயிரத்து 559 பேர் நோய்த்தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். திரு.வி.க.நகரில் ஆயிரத்து 325 பேரும்,​ தேனாம்பேட்டையில் ஆயிரத்து 317 பேரும், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 262 பேரும், அண்ணாநகரில் ஆயிரத்து 46 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வளசரவாக்‍கத்தில் 777 பேருக்‍கும், அடையாறில் 672 பேருக்‍கும், அம்பத்தூரில் 504 பேருக்‍கும், திருவொற்றியூரில் 369 பேருக்‍கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவரத்தில் 274 பேரும், சோழிங்கநல்லூரில் 208 பேரும், பெருங்குடியில் 212 பேரும், மணலியில் 168 பேரும், ஆலந்தூரில் 165 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00