திருவள்ளூர் மாவட்டத்தில் மதுக்‍கடைகளை திறக்‍க கடும் எதிர்ப்பு - 10 பெண்கள் உட்பட 30 பேர் கைது

May 23 2020 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே மதுக்‍கடையை மீண்டும் திறக்‍க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோழவரம் அருகே அருமந்தை கூட்டுச்சாலையில் உள்ள டாஸ்மாக்‍ கடை, இன்று மீண்டும் திறக்‍கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசாருடன் வாக்‍குவாதம் ஏற்பட்டது. மதுக்கடை மூடப்பட்டிருந்ததால் குடும்பங்களில் சண்டை சச்சரவு ஏதும் இல்லாமல் இருந்ததாகவும், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் ஏதுமின்றி கிராமங்கள் அமைதியாக இருந்ததாகவும் தெரிவித்த பெண்கள், மீண்டும் மதுக்கடையை திறந்தால் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் எனவும் அச்சம் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 30-க்‍கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்‍கட்டாயமாக இழுச்சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைக்‍கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து டாஸ்மாக்‍ கடை மீண்டும் திறக்‍கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00