செங்கல்பட்டு ஆய்வு கூடத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க நிதி ஒதுக்க கோரிய வழக்கு - மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

May 22 2020 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு ஆய்வுக் கூடத்தில், கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க நிதி ஒதுக்கக் கோரிய வழக்கு குறித்து, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கத்தில், மத்திய அரசால், 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எச்.எல்.எல்., என்ற ஆய்வுக் கூடத்தில், ராபிஸ் போன்ற பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது, உலகையே கொரோனா அச்சறுத்தி வரும் நிலையில், செங்கல்பட்டு ஆய்வுக் கூடத்தில், கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க, போதுமான நிதி, உபகரணங்கள் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அய்யாதுரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க, தனியார் நிறுவனங்களுடன் அரசு கைகோர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாகவும், மருந்து கண்டுபிடிக்கும் பணியை பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்ந வழக்‌கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது, இது​தொடர்பாக, அடுத்த‌ மாதம் 3-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00