வீடுகளுக்கே சென்று ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தும் ரேஷன் கடைகளில் திரண்ட பொதுமக்கள் -சென்னையின் பல இடங்களில் காலை 5 மணி முதலே நீண்டவரிசையில் நின்றதால் பெரும் குழப்பம்

Apr 4 2020 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நிவாரண நிதிக்‍கான டோக்கன்கள் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தாலும், முன்னுக்‍குப்பின் முரணான அறிவிப்புகளால் சென்னையில் பல இடங்களில் ரேஷன் கடைகளில் டோக்கன் பெற, இன்று அதிகாலை முதலே பொதுமக்‍கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டை நியாய விலை கடையில் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்‍கு இன்று ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அதிகாலை 5 மணிமுதல் பொதுமக்‍கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடை வழக்‍கமாகத் திறக்‍கப்படும் நேரத்தைக்‍ கடந்தும் திறக்‍கப்படாததால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளிலேயே வழங்கப்படுமா? அல்லது வீடுகளில் வந்து வழங்குவார்களா? என்பது குறித்து சரிவர தெரிவிக்‍கப்படாததால், பொதுமக்‍கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். வரும் 7ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்தது இதற்கு பெரும் காரணமாக அமைந்தது. கொரோனா பரவலைத் தடுக்‍க சமூக இடைவெளியை கடைபிடிக்‍க வேண்டும் என வலியுறுத்தும் அரசாங்கமே, ரேஷன் கடைகளில் கூட்டம் கூட்டமாக மக்‍களை காக்‍க வைப்பது? சரிதானா என பொதுமக்‍கள் கேள்வி எழுப்புகின்றனர். கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவுக்‍கே போராடி வருவதால், நிவாரணத்தொகையை தமிழக அரசு உயர்த்தித்தர வேண்டுமென பொதுமக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00