கொரோனா நிவாரண தொகை ஆயிரம் ரூபாயை யார் வழங்குவது என்பதில் திமுக - அதிமுக இடையே கடும் போட்டி - கட்சிக்காரர்களின் கௌரவ பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்

Apr 4 2020 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகையில் ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண தொகையை பொதுமக்களுக்கு யார் வழங்குவது என்பதில் திமுக - அதிமுக இடையே ஏற்பட்ட மோதலால் நிவாரணம் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே விசலூர் ஊராட்சிக்குட்பட்ட ரேஷன் கடையில் கொரோனா நிவாரண தொகை விநியோகம் தொடங்கிய போது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தற்போதைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவருமான கண்ணன் தனது தலைமையில் பொருட்களை வழங்க முயன்றார். இதனை அறிந்து அங்கு வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் அனுசுயா தனது முன்னிலையில்தான் பொருட்களை வழங்க வேண்டும் என வாதிட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதால் நிவாரண பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொறையாறு போலீசார் அதிமுகவைச் சேர்ந்த கண்ணனை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00