ஸ்ரீபெரும்புதூர் அருகே காய்கறியை அதிக விலைக்கு விற்ற கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

Apr 2 2020 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காய்கறியை அதிக விலைக்கு விற்ற கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலவும் ஊரடங்கை பயன்படுத்தி, கடைக்காரர்கள் சிலர் பொருட்களை பதுக்கி கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, மாவட்ட வழங்கல் அதிகாரி திருமதி.கஸ்தூரி ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே ஒரு கடையை ஆய்வு செய்தபோது, அங்கு கிலோ 40 ரூபாய்க்கு விற்க வேண்டிய அவரக்காய் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்ப்டது தெரியவந்தது.

இதேபோல், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பிற காய்கறிகளுடன் இருமடங்கு விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதையடுத்து, அக்கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் பெருங்குளத்தூர் பகுதியில் ஒரு மளிகை கடையில் பெரும்பாலான பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, கடை உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த கடையின் கிடங்கிற்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00