கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதி தமிழகம் - மாநில அரசு அறிவிப்பு

Apr 2 2020 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்‍கப்படுவதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

அரசு, தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்‍குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொழுதுபோக்‍கு பூங்காக்‍கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், மாணவர் மாணவியர் மற்றும் வருகை புரிபவர்களின் எண்ணிக்‍கைக்‍கேற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் வாஷ்பேசின்கள், திரவசோப்பு கரைசல் அல்லது கை கழுவும் சோப்பு வைக்‍கப்பட வேண்டும் என்றும், கட்டிடத்திற்குள் நுழையும் முன்பும் வெளியில் செல்லும் முன்பும் கைகளை நன்கு கழுவிய பிறகே அனுமதிக்‍க வேண்டும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா நோய் பற்றிய தகவல்களை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் பொது சுகாதாரத்துறைக்‍கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்‍க வேண்டும் - அவ்வாறு தெரிவிக்‍க தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரிக்‍கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அவ்வப்பொழுது முழுவதுமாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து நோய்த்தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்‍கப்பட வேண்டும் - நோய்த்தொற்று நடவடிக்‍கைகள் எடுக்‍கத்தவறும் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்‍கைகள் எடுக்‍கப்படும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அறிவுரைகளை கடைபிடிக்‍க தவறுபவர்கள் மீது சட்ட நடவடிக்‍கை எடுக்‍கப்படும் - இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188ன்கீழ் ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனைக்‍குள்ளாவார்கள் என்றும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00