கொரோனா நோய் கிருமி பரவுரதை மதத்துடன் சம்பந்தப்படுத்துவதா? - தமிழக அரசின் பொறுப்பற்ற அறிக்கைக்கு மனிதநேய மக்‍கள் கட்சித்தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

Apr 2 2020 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நோய் கிருமி பரவலாக்கத்திற்கு மதம் காரணமா? என கேள்வி எழுப்பியுள்ள மனிதநேய மக்‍கள் கட்சித்தலைவர் திரு.எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக அரசின் பொறுப்பற்ற வெறுப்புணர்வு அறிக்கைக்‍கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா நோய் கிருமி பரவலாக்கத்திற்கு தப்லீக் ஜமாஅத் எனும் சிறுபான்மை ஆன்மீக குழு ஒன்றின் செயற்பாடே காரணம் என்ற அடிப்படையில், யாரால் வெளியிடப்பட்டுள்ளது என்ற பெயர்கூட இல்லாமல் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த நோய் பாதிப்புடன் காஞ்சிபுரம், சென்னை, கோவை, நெல்லை, திருப்பூர் ஆகிய மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்கள் யாரும், தப்லீக் குழுவின் தொடர்பினால் இந்த நோய்த் தொற்றைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்‍கது என தெரிவித்துள்ளார்.

மதுரை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர்கள் தப்லீக் ஜமாஅத் எனப்படும் மதக்குழு ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்பது உண்மைதான் - இவர்கள் அனைவரும் ஒரே மதத்தினர் என்பதும் இவர்களால் வேறு எந்த மதத்தினரும் பாதிக்கப்படவில்லை என்பதும் எதார்த்தமான உண்மை என்றும் திரு.ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குறிப்பிட்ட மதகுழுவினர் நடத்திய நிகழ்ச்சிக்குச் சென்று வந்தவர்கள், மருத்துவ பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், இந்த உண்மைகளையெல்லாம் நன்கு தெரிந்த தமிழக அரசு, ஒரு குறிப்பிட்ட மதக்குழுவினர் மீது மட்டும் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையிலும் வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும், வெறுப்பு அரசியலை மேற்கொள்ளும் அமைப்புகள் போல் அறிக்கை வெளியிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது - கொரோனாவை எதிர்த்து அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒருமித்து மக்கள் போராடி கொண்டும், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டும் இருக்கும் நிலையில், சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து வெறுப்பு பரப்புரை தொடங்கப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசு, மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திரு.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00