கேரளாவிலிருந்து தமிழகம் திரும்பிய பாம்பன் மீனவர்கள் 77 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

Apr 2 2020 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள கடல்பகுதியில் மீன்பிடித்து விட்டு பாம்பன் திரும்பிய 77 மீனவர்கள், கொரோனா முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதிகளிலிருந்து 7 படகுகள் மூலம், நாகை மாவட்டத்தை சேர்ந்த 77 மீனவர்கள், கடந்த 12ம் தேதி கேரளாவின் கொச்சி கடற்கரை பகுதிகளில் மீன் பிடிக்‍க சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் வழியாக ஊர் திரும்பினர். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், அம்மீனவர்களுக்கு சுகாதாரத் துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில் மீனவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதுவும் இல்லாததால், நாகையை சேர்ந்த 77 மீனவர்களையும் கடும் கட்டுபாடுகளுடன் தனி வாகனத்தில் ராமநாதபுரம் அருகே அரசு விடுதியில் தனிமைபடுத்தி தங்க வைத்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய மீன் பிடி படகை கரைக்கு கொண்டு வராமல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. சுகாதார துறையினர் மீன் பிடி விசைபடகின் மீது கிருமி நாசினி தெளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00