கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை போக்கும் வழிகள் - இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் அறக்கட்டளை

Apr 1 2020 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை போக்‍கும் வகையில், நாடு முழுவதும் உள்ள மக்‍களுக்‍கு, மாஸ்டர் மைண்ட் என்னும் அறக்கட்டளை நிறுவனம், இலவச உளவியல் ஆலோசனை வழங்குகிறது.

கொரோனா பரவலை தடுக்‍க, பெரும்பாலான நாடுகளில், மக்‍கள், சமூக விலகலை கடைபிடித்து வீடுகளுக்‍குள்ளேயே முடங்கியுள்ளனர். நோய்த் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், வேலை இழந்துவிடுவோமோ என்ற கவலை, உணவு பற்றாக்‍குறை, பணப்பற்றாக்‍குறை, தூக்‍கமின்மை என ஏதோ ஒரு விதத்தில், கொரோனாவால் அனைத்து மக்‍களும் பாதிக்‍கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா அச்சத்தில் உள்ள மக்‍களுக்‍கு உடலியல் மற்றும் உளவியல் ரீதியில் ஆலோசனைகளை வழங்க, உலக சுகாதார நிறுவனம், வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில், இந்தியா முழுவதும் உள்ள மக்‍களுக்‍கு, கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை போக்‍கும் வகையில், மாஸ்டர் மைண்ட் என்னும் அறக்கட்டளை நிறுவனம், இலவச உளவியல் ஆலோசனைகளை வழங்குகிறது. உளவியல் ஆலோசனை பெற விரும்புவோர், www.mastermindfoundation.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய பக்க‍த்தில், தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், பஞ்சாபி, ஹிமாச்சலி, மராத்தி, கன்னடம், குஜராத்தி, தெலுங்கு ஆகிய 10 மொழிகளில் இலவச உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00