இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு : டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கும் கடும் எதிர்ப்பு - போராட்டங்களில் ஏராளமானோர் பங்கேற்பு

Feb 27 2020 10:04AM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்‍குதல் நடத்தப்பட்டதைக்‍ கண்டித்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, மத்திய - மாநில அரசுகளுக்‍கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, 13-வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்ட மேடையில் திருமதி. பாக்கியலட்சுமி என்ற இந்துப் பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்களுக்கு, அப்பகுதியில் உள்ள இந்து மக்கள் உணவு சமைத்துக் கொடுத்து ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போராட்ட மேடையில் இந்து மதத்தைச் சார்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு இந்து முறைப்படி வளைகாப்பு நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய பெண்கள், பாக்கியலட்சுமிக்கு வளையல் அணிவித்தும், அட்சதை தூவியும் வாழ்த்தினர். மேலும், வளைகாப்பு விழாவில் வழங்கப்பட்ட தாம்பூலப் பையில் "இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளே" என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது அனைவரையும் நெகிழச் செய்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் அற வழியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது வன்முறை நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இஸ்லாமிய பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் நடைபெற்ற கலவரத்தைக் கண்டித்து, அனைத்து அரசியல் கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தான புகைப்படங்களை கையில் ஏந்தி போராட்டக்‍காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, பல இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். போராட்டத்தின் போது டெல்லியில் நடந்த வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க வை சேர்ந்த கபில் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜனநாயக முறையில் அமைதியாக போராடிய பொதுமக்கள் மீது கொலை வெறித் தாக்‍குதல் நடத்திய பா.ஜ.க. - R.S.S. அமைப்பினரை கைது செய்ய வலியுறுத்தி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் ஆளும் பா.ஜ.க. அரசைக்‍ கண்டித்தும் மற்றும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய டெல்லி காவல் துறையைக்‍ கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00