2018ல் நடைபெற்ற குரூப்-4 தேர்விலும் முறைகேடு முயற்சி : காவலரை விலைக்கு வாங்க முடியாததால் முயற்சி தோல்வி

Feb 27 2020 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
2018ம் ஆண்டு நடைபெற்ற குரூப் - 4 தேர்விலும், ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட முயன்றது, சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4, குரூப் - 2ஏ, கிராம நிர்வாக அதிகாரிக்கான தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில், 2018-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்விலும், அவர்கள் முறைகேடு செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது. இதற்காக 40 பேரிடம் 7 லட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். எனினும், விடைத்தாள்களுடன் பாதுகாப்புக்குச் சென்ற காவலர் அதிக கவனத்துடன் செயல்பட்டதாலும், அவரை விலைக்கு வாங்க இயலாததாலும், அம்முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து பணத்தை அவர்கள் திருப்பிக் கொடுத்துள்ளனர். சென்னையில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய தேர்வு மையங்கள் தொலைவில் உள்ளதால், முறைகேட்டுக்காக அவற்றை தேர்வு செய்ததும், சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00