மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - நல்லாசிரியர் விருதுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

Feb 25 2020 8:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், நல்லாசிரியர் விருதுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்த நாகராஜ், புகழேந்தி ஆகிய இருவரும் தங்களிடம் படித்து வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருவரும் விடுதலை செய்யப்பட்டதால், மாணவிகளின் பெற்றோர்கள் 4 பேரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில், இரு ஆசிரியர்களையும் குற்றவாளிகள் என அறிவித்து நீதிபதி வேல்முருகன் கடந்த வாரம் தீர்ப்பளித்தார். தண்டனை விபரங்கள் இன்று தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிகள் இருவரும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் நாகராஜுக்கு 5 ஆண்டுகள் சிறையும், இரண்டாவது குற்றவாளியான புகழேந்திக்கு மூன்று ஆண்டுகள் சிறையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பெண் குழந்தைகளுக்கு குடும்பம், பள்ளி உள்ளிட்ட இடங்களிலேயே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00