திருப்பூர் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் 500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வாடிக்‍கையாளர்களை அதிர்ச்சி

Feb 25 2020 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே, பாரத ஸ்டேட் வங்கியில் 500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வாடிக்‍கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ்வழக்‍கு தொடர்பாக போலீசார் 6 தனிப்படைகளை அமைத்து, கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பல்லடம் அடுத்த கள்ளிபாளையம் பகுதியில், பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வங்கிப் பணிக்கு ஊழியர்கள் வந்தபோது, லாக்‍கர்கள் உடைக்‍கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்‍கப்பட்டிருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். வங்கியின் பின்புறம் இருந்த ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில், சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள 500 சவரன் தங்க நகைகள் மற்றும் 18 லட்ச ரூபாய் பணமும் கொள்ளையடிக்‍கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மர்ம நபர்கள், சிசிடிவி கேமராக்களை உடைத்து, ஹார்டு டிஸ்க்குகளை திருடிச் சென்ற நிலையில், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்‍கப்பட்டு, கொள்ளையர்களை பிடிக்‍கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டல் தலைமையில், 6 தனிப்படைகள் அமைக்‍கப்பட்டுள்ளன.

ஆத்திமடைந்த வாடிக்‍கையாளர்கள், வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்டு அவர்களுடன் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00