மாண்புமிகு அம்மாவின் 72வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - அம்மாவின் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூறும் தொண்டர்கள்

Feb 24 2020 9:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் ஆலந்தூர் பகுதி கழகம் 166 வது வட்ட கழகச் செயலாளர் திரு. தமிழ் தலைமையில், B.V. நகரில் நடைபெற்ற அம்மா பிறந்தநாள் விழாவில், அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்ட கழக துணைத் தலைவர் திரு. குமரவேல், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல், ஆலந்தூர் பகுதி கழகச் செயலாளர் திரு. ஏ.என். லட்சுமிபதி தலைமையில், ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே, அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் திரு. வேம்பரசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி. விஜயலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் புறநகர் மாவட்டம் தாராபுரத்தில், மாவட்ட அம்மா பேரவை சார்பில், மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளையொட்டி, ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து தாராபுரம் உழவர் சந்தை பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட அம்மா பேரவை தலைவர் திரு. ஈஸ்வரமூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட அவைத்தலைவர் ஆரியூர் திரு. சுப்பிரமணியன் தலைமையில், கரூர் - கோவை நெடுஞ்சாலையில் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கழகத்தினர் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர். இதில், கரூர் மாவட்டப் பொருளாளர் திரு. தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதேபோல் கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் வைக்‍கப்பட்டிருந்த​அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வடசென்னை வடக்கு மாவட்டக் கழகம் சார்பில், ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட 14 வட்டங்களிலும் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திரு. வீ. சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிரணி சார்பில், திருவொற்றியூர் மார்க்கெட் அருகே, அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மாவட்ட மகளிரணி செயலாளர் மதிவதனம் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

கடலூர் நகர அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பாக, ஆல்பேட்டையில் உள்ள நகரக்‍ கழக அலுவலகத்தில், அம்மாவின் திருவுருவ படத்திற்கு கடலூர் நகர கழக செயலாளர் திரு. வி. இராதாகிருஷ்ணன் தலைமையில், கழகத்தினர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதில் கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் திரு. ஏ.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் உசிலம்பட்டி பகுதியில் மாவட்ட செயலாளர் திரு.இ.மகேந்திரன் தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் திரு.செ.சரவணன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மேலூர் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் வீரப்பன்சத்திரம் பகுதி 29வது வட்ட கழகம் சார்பில் வள்ளலார் வீதியில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.டி.தங்கராஜ், பொருளாளர் திரு.தரணி சண்முகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் உடுமலை, மடத்துக்குளம், கொமரலிங்கம், குடிமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் மாண்புமிகு அம்மாவின் 72வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.சி.சண்முகவேல் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மடத்துக்குளம் ஒன்றிய கழகம் சார்பில் 200 மாணவ, மாணவிகளுக்கு பேனா ,பென்சில் மற்றும் பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன.

இதேபோல், திருப்பூர் மாநகர வடக்கு, தெற்கு மாவட்ட கழகம் சார்பில், வெடத்தலாங்காடு பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில் பாக்ஸ், சிலேட், பாய்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாநகர் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கிங், கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் முத்து குட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தருமரி மாவட்டத்தில் தருமபுரி, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிர்வாகிகள் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தருமபுரி காமாட்சியம்மன் தெருவில் நகர கழகத்தின் சார்பில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தருமபுரி நகர கழக செயலாளர் திரு.டான்சில்க் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தின் சார்பில், ஒன்றிய கழக செயலாளர் திரு.கோபால் தலைமையில் கட்டனசம்பட்டி, பல்லவநாயக்கன்பட்டி, வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கழக கொடியேற்றி, அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து மலர் தூவப்பட்டது.

இதேபோல், மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பரமத்திவேலூர், கபிலர் மலை, திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இனிப்புகள் வழங்கியும் நலத்திட்டங்கள் அளித்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டன.

நாகை தெற்கு மாவட்ட கழகம் திருமருகல் தெற்கு ஒன்றியம் சார்பில் கங்களாச்சேரி கடை வீதியில் ஒன்றிய கழக செயலாளர் திரு.முகமது பக்ருதீன் தலைமையில், அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதேபோல், காரைக்காலில், மாண்புமிகு அம்மாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, அ.ம.மு.க. சார்பில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. கழக அவைத்தலைவர் சாகுல் அமீது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் சிக்னல் அருகே, கம்பம் நகர கழகம் சார்பில் நகர செயலாளர் திரு.ராஜாமணி தலைமையில் கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதேபோல், ஆண்டிபட்டி ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் திரு. ஜெயக்குமார் தலைமையில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அம்மா பேரவை செயலாளர் அய்யணன், ஒன்றிய துணைச் செயலாளர் பாலச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி 46 மற்றும் 47வது வார்டுகளில் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பாத்திமா நகர், திரேஸ்புரம் பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.புவனேஸ்வரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க கோவை மத்திய மாவட்டக்‍ கழகம், சிங்காநல்லூர் பகுதிக்‍ கழகம் சார்பில், நீலிகோணம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில், அம்மா பிறந்தநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய, நகர அ.ம.மு.க சார்பில், ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே, அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தஞ்சை வடக்கு மாவட்ட கழகம், கும்பகோணம் நகர, ஒன்றியப் பகுதிகளில், மாவட்ட மீனவரணி செயலாளர் திரு.S.S. ராஜ் தலைமையில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியக்‍ கழகம் சார்பில், முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே, அலங்கரித்து வைக்கப்பட்ட அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து சர்க்கரைப் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு விநியோகிக்‍கப்பட்டது. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், அ.ம.மு.க ஊத்தங்கரை ஒன்றியக்‍ கழகம் சார்பில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்டம் போடி நகரக்கழகம் சார்பில், திருவள்ளுவர் சிலை அருகே அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்‍கப்பட்டது. பின்னர் பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

விருதுநகர் மேற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் மானகசேரியில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளிக்‍ குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம், பென்சில், பேனா உள்ளிட்ட எழுதுபொருட்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.K.காளிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம் பகுதி அ.ம.மு.க சார்பில், அம்மா பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர்தூவி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நகரக்‍ கழகச் செயலாளர் திரு.பூக்கடை சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க சார்பில் தோவாளையில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.செந்தில் முருகன், மாவட்ட இணைச் செயலாளர் அம்மு ஆன்றோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க சார்பில் இடைகோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இன்று பிறந்த பெண் குழந்தைக்கு மேற்கு மாவட்ட செயலாளர் திரு.ஜெங்கின்ஸ் தங்க மோதிரம் வழங்கினார். தக்கலை சந்திப்பில் அம்மாவின் திருவருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அம்மாவின் திருவுருவப் படம் அலங்கரிக்‍கப்பட்டிருந்தது. கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். திண்டுக்கல் கிழக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ராமுத்தேவர் தலைமையில் பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.ம.மு.க செயலாளர் திரு.கே.பி.நல்லசாமி தலைமையில் கழகத்தினர் ஒட்டன்சத்திரம் பிரதான சாலையில், ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையம் அருகே வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அ.ம.மு.க மின்சாரப் பிரிவு செயலாளர் திரு.ரஷீத் தலைமையில் அம்மா பிறந்தநாள் விழா வத்தலகுண்டு பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், அம்மா பிறந்தநாளையொட்டி, சோளிங்கர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் திரு.சி.கோபால் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாகை மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றியம் சார்பில் திட்டச்சேரியில் உள்ள குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விருதுநகர் மத்திய மாவட்டக்‍கழகம் சார்பில், சிவகாசி ரிசவ் லைன் பகுதியில், அம்மா திருவுருவப் படத்திற்கு மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு.G. சாமிக்காளை தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம், அ.ம.மு.க சார்பில் அம்மா பிறந்தநாளையொட்டி, உமராபாத் அருகே, கைலாசகிரி ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையத்தில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00