குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - நீதிமன்ற அனுமதி கிடைக்‍காததால் கலைந்து சென்ற போராட்டக்‍காரர்கள்

Feb 19 2020 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இஸ்லாமிய அமைப்பினர் சென்னையில் நடத்திய தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின. இந்தக்‍ கோரிக்‍கைகளை முன்வைத்து அவர்கள் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை சுமார் 10 மணியளவில் சேப்பாக்‍கம் பகுதியில் பல்லாயிரக்‍கணக்‍கில் இஸ்லாமியர்கள் குவிந்தனர். 20க்‍கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரக்‍கணக்‍கான பெண்களும் பங்கேற்றனர். இதன் காரணமாக, அண்ணா சாலை, வாலாஜா சாலை, மெரினா கடற்கரை பகுதி போன்ற இடங்களில் காணும் இடமெல்லாம் இஸ்லாமியர்கள் குவிந்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தை தடுக்‍கும் முயற்சியாக பல்லாயிரக்‍கணக்‍கில் காவல்துறையினரும் குவிக்‍கப்பட்டனர். இதன்காரணமாக அப்பகுதியில் போக்‍குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுவழிப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் நீதிமன்றம் விதித்த தடை காரணமாக சட்டமன்றத்தை நோக்‍கி செல்ல போராட்டக்‍காரர்களுக்‍கு அனுமதி மறுக்‍கப்பட்டதால், இதில் பங்கேற்றவர்கள் கலைந்துசெல்ல தொடங்கினர். சுமார் பன்னிரண்டரை மணியளவில் இந்தப் போராட்டம் முடிவுக்‍கு வந்ததாக அறிவிக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00