நிர்பயா பாலியல் வன்கொடு‌மை வழக்கு - குற்றவாளி முகேஷின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Jan 28 2020 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -
நிர்பயா பாலியல் வழக்கில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் குமார் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. கருணை மனு, சீராய்வு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் வினய் குமார் ஷர்மா, அக்ஷய் குமார், பவன் குமார் குப்தா ஆகியோர் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், திஹார் சிறை நிர்வாகத்திற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் கடந்த சனிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. சாட்சியங்களில் சந்தேகம் உள்ளதாகவும், எனவே தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டுமெனவும், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் தந்தை தொடர்ந்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதேபோல், குடியரசுத் தலைவரால் ரத்து செய்யப்பட்ட கருணை மனுவை, நீதித்துறை மறு ஆய்வு செய்யக்கோரி குற்றவாளி முகேஷ் குமார் சிங், சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று மதியம் 12.30 மணியளவில், விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் R.பானுமதி, அசோக் பூஷன், A.S. போபண்ணா ஆகியோர் விசாரிக்கவுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00