தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கங்களில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பு - சிலர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

Jan 27 2020 8:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கடலூர், பெரம்பலூர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கங்களில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டங்களில் கலந்துகொண்ட பொதுமக்களில் சிலர், தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கீழ்அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்‍கு, மூன்று மகன்கள் உள்ளனர். அவரது முதல் இரண்டு மகன்களும் முதியவரின் சொத்தை அபகரிக்‍க முயல்வதாகவும், தந்தை என்றும் பாராமல் அடித்து உதைத்து, வெளியே தள்ளியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்‍குளிக்‍க முயற்சி செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம், ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வம் என்ற 27 வயது இளைஞர், இரு ஆண்டுகளுக்கு முன் அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்திற்கு உதவித்தொகை கேட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் பலமுறை விண்ணப்பித்துள்ளார். இருப்பினும், இதுவரை உதவித்தொகை வழங்கப்படாததால் மனமுடைந்த அருள்செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்ட அரங்கில், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அருள்செல்வத்தை தடுத்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

சேலம் மாவட்டம், நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த தேன்மொழி என்ற மூதாட்டியின் வீட்டு சுற்றுச்சுவரை, அரசு இடத்தில் இருந்ததாகக்கூறி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதாக கூறப்படுகிறது. தனக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, தேன்மொழி தீக்குளிக்க முயன்றார். அவரைக் காப்பாற்றிய காவல்துரையினர், சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00