செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி மோதல் தொடர்பாக 4 பேர் கைது - ஊழியர்கள் பணிக்கு வராததால் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

Jan 27 2020 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு அருகே பரனூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் நேற்று சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பாக அரசு விரைவு பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சுங்கச்சாவடி ஊழியர் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுனர், பேருந்தை சுங்கச்சாவடி வாயிலின் குறுக்கே நிறுத்தியதால், பிற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால், 5 மணி நேரம் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நெரிசலில் சிக்கி தவித்த பேருந்து பயணிகள் சிலர், சுங்கச்சாவடியில் இருந்த வாகனங்கள், சிசிடிவி கேமராக்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் தப்பியோடிவிட்டனர். இதனால் கட்டணம் வசூலிக்க ஆள் இல்லாமல் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் 2-வது நாளாக வாகனங்கள் நிற்காமல் சென்று வருகின்றன. இந்த நிலையில், சுங்கச்சாவடி வன்முறை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00