புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் : அ.ம.மு.க. சார்பில் திருவுருவப் படத்திற்கு மரியாதை - பொதுமக்‍களுக்‍கு அன்னதானம்

Jan 17 2020 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, அ.ம.மு.க சார்பில், அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, அ.ம.மு.க மயிலை பகுதி சார்பில், முண்டகக்‍கண்ணி அம்மன் ரயில் நிலையம் அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது. அ.ம.மு.க மயிலை பகுதி துணைச் செயலாளர் திரு.ரா.கன்னியப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி மற்றும் சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.விருகை T.S.கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மயிலை பகுதி செயலாளர் திரு.மயிலை அர்ஜுனன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தென்சென்னை வடக்கு மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்‍கேணி பகுதிக்‍ கழகம் சார்பில் சேப்பாக்கம் திரு. ராஜேந்திரன் தலைமையில், 63-வது தெற்கு வட்டகழக இணைச் செயலாளர் திரு.ராஜா, வட்ட துணைச் செயலாளர் திரு. ஆசை ஆகியோரது ஏற்பாட்டில், திருவல்லிக்‍கேணி பார்டர் தோட்டம் பகுதியில், எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென் சென்னை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் திரு.சுந்தரேசன், அம்மா தொழிற்சங்க பேரவை மாவட்டச் செயலாளர் திரு.ஜெயமூர்த்தி, தலைமை கழகப் பேச்சாளர் திரு.பழனி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் திரு.ரமணி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் திரு.சந்திரசேகர் பகுதி, வட்டக்‍ கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00