புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : திருவுருவ படத்திற்கு அ.ம.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு - பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Jan 17 2020 7:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், பல்வேறு பகுதிகளில் அரவது திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை மாநகர மாவட்ட கழகம் சார்பிலும், தெற்கு மாவட்ட கழகம் சார்பிலும், மாவட்ட செயலாளர் திரு. சேலஞ்சர் துரை தலைமையில், சித்தாபுதூரில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை - பொள்ளாச்சி சாலையில், மகாலிங்கபுரம் அருகே, அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு, கோவை புறநகர் மாவட்ட செயலாளர் திரு. K. சுகுமார் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். விழாவில் நல்வி கவுண்டன் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சியினர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் மாதலம்பாடி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.எஸ்.ஆர்.தர்மலிங்கம் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தக்கலை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் திரு.ஜெங்கின்ஸ் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காரைக்காலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர், பொறுப்பாளர், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00