விருதுநகர் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை : நிர்வாகிகளின் பெயர்களை அறிவித்தார் டிடிவி தினகரன்

Jul 19 2019 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

விருதுநகர் கிழக்கு மாவட்ட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கழக பொதுச் செயலளார் திரு. டிடிவி தினகரன் தலைமையில், மதுரையில் இன்று நடைபெற்றது. அப்போது நிர்வாகிகளுடன் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து திரு. டிடிவி தினகரன் கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலளார் நியமிக்கப்படும் வரை, விருதுநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலளார் சாத்தூர் திரு. சுப்பிரமணியன் மற்றும் கழக அம்மா பேரவை இணைச்செயலளார் திரு. ஜெயராஜ் ஆகியோர் பணியாற்றுவார்கள் என திரு. டிடிவி தினகரன் அறிவித்தார்.

அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சுழி தொகுதியில் போட்டியிடுமாறு விருதுநகர் கிழக்‍கு மாவட்டக்‍ கழக நிர்வாகிகள் திரு. டிடிவி தினகரனிடம் வேண்டுகோள் விடுத்தனர். திருச்சுழி தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக திரு. டிடிவி தினகரன் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் உடன் கட்சி வளர்ச்சி பணிகள் ஆலோனைக்கூட்டம், கழக பொதுச்செயலளார் திரு. டிடிவி தினகரன் தலைமையில் நடைப்பெற்றது. அப்போது திருநெல்வேலி மாவட்டத்திற்கு கழக செயலளார்கள் நியமிக்கப்படும் வரை, திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் திரு. பொய்கை மாரியப்பன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட பொருளார் திரு. பால் கண்ணன், திருநெல்வேலி மாவட்ட வள்ளியூர் ஒன்றிய செயலளார் திரு. குமரேசன், கழக அம்மா பேரவை இணைச்செயலளார் திரு. பரமசிவ ஐயப்பன் ஆகியோர் குழுவாக செயல்படுவார்கள் என கழக பொதுச்செயலளார் டிடிவி தினகரன் அறிவித்தார்.

இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள், திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00