சமூக செயற்பாட்டாளர் முகிலன், பாலியல் வழக்‍கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்‍ காவலில் சிறையில் அடைப்பு - தன்மீது வேண்டுமென்றே அரசு பொய் வழக்‍கு புனைந்துள்ளதாக முகிலன் குற்றச்சாட்டு

Jul 8 2019 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
சமூக செயற்பாட்டாளர் திரு.முகிலனை பாலியல் வழக்‍கில் சென்னை போலீசார் கைது செய்து நீதிமன்றக்‍ காவலில் சிறையில் அடைத்தனர். தன்மீது வேண்டுமென்றே அரசு பொய் வழக்‍கு புனைந்துள்ளதாக திரு. முகிலன் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்‍குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்களை காணொலி காட்சியாக சென்னையில் வெளியிட்ட சமூக செயற்பாட்டாளர் திரு. முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காணாமல் போனார். இந்நிலையில், திருப்பதியில் ஆந்திர மாநில போலீசாரால் திரு.முகிலன் கைது செய்யப்பட்டார். பின்னர், காட்பாடியில் தமிழக ரயில்வே போலீசாரிடம் அவர் ஒப்படைக்‍கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் நேற்று இரவு சென்னைக்‍கு அழைத்துவரப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை எழும்பூரில் வைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே அளித்திருந்த பாலியல் புகாரின்பேரில், திரு.முகிலனை சென்னை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்‍கு உட்படுத்தப்பட்ட அவர், நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி உத்தரவின்பேரில், அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திரு. முகிலன், தன்மீது வேண்டுமென்றே அரசு பொய் வழக்‍கு புனைந்துள்ளதாகவும், நீதிபதியிடம் அனைத்து உண்மைகளையும் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00