கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 1-ம் தேதி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட விரகனூரில் பிரச்சாரத்தைத் தொடங்கி மே 16 ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார் : அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமைக்கழகம் அறிவிப்பு

Apr 23 2019 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், வரும் 1-ம் தேதி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட விரகனூரில் பிரச்சாரத்தைத் தொடங்கி, மே 16 ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழகம் அறிவித்துள்ளது.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலில் களம் காணும் கழக வேட்பாளர்களுக்‍கு ஆதரவாக வரும் மே 1-ம் தேதி முதல் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

மே 1-ம் தேதி புதன்கிழமை மாலை 4 மணியளவில், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட விரகனூர் என்ற இடத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கி, மே 16-ம் தேதி வரை நான்கு தொகுதி மக்களையும் சந்தித்து வாக்கு சேகரிக்க இருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட விரகனூரில், மே 1ம் தேதி மாலை 4.50 மணியளவில் பிரச்சாரத்தை தொடங்கவுள்ள திரு.டிடிவி தினகரன், சிலைமான், பனையூர் விலக்‍கு, பெருங்குடி, வலையங்குளம், பெரிய ஆலங்குளம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்‍களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

மே 2ம் தேதி திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பசுமலை தியாகராஜ காலனியில் மாலை 4.50க்‍கு பிரச்சாரத்தை தொடங்கவுள்ள திரு.டிடிவி தினகரன், தனக்‍கன்குளம், கீழகுயில்விலக்‍கு, பல்கலைநகர் உள்ளிட்ட இடங்களில் வாக்‍கு சேகரிக்‍கிறார்.

மே 3ம் தேதி அரவக்‍குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட சேந்தமங்கலம் மேல்பாகத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் திரு.டிடிவி தினகரன், தடாகோவில், மலைகோவிலூர், வெஞ்மாங்கூடலூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

4ம் தேதி சனிக்‍கிழமை, அரவக்‍குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பரமத்தி தெற்கு ஒன்றியம், பரமத்தி வடக்‍கு ஒன்றியப் பகுதிகளில் திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

மே 5ம் தேதி ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட செய்துங்கநல்லூர், வல்லநாடு, ஓனமாக்‍குளம் உள்ளிட்ட இடங்களில் திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் ​மேற்கொள்ள உள்ளார்.

மே 6ம் தேதி ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பசுவந்தனை வழி, குறுக்‍குச்சாலையில் மாலை பிரச்சாரத்தை தொடங்கும் திரு.டிடிவி தினகரன், இரவு ஓட்டநத்தத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

சூலூர் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட இடங்களில் மே 7ம் தேதி பிரச்சாரம் செய்யவுள்ளார். இருகூரில் மாலை 5 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கும் திரு.டிடிவி தினகரன், கலங்கல் என்ற இடத்தில் இரவு பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

மே 8ம் தேதி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட சின்னியம்பாளையத்தில் பிரச்சாரத்தை தொடங்கவுள்ள திரு.டிடிவி தினகரன், வாகராயம்பாளையம், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட விரகனூர், சிலைமான், சின்ன அனுப்பானடி உள்ளிட்ட இடங்களில் திரு.டிடிவி தினகரன், மே 9ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அரவக்‍குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட தளவப்பாளையம், தோட்டக்‍குறிச்சி, புதுக்‍குறுக்‍கு பாளையம், நஞ்சைபுகளூர் ஊராட்சி, கடையனூர் உள்ளிட்ட இடங்களில் மே 10ம் தேதி திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பொட்டலூரணி, பேரூரணி, கூட்டாம்புளி உள்ளிட்ட இடங்களில் திரு.டிடிவி தினகரன், மே 11ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

மே 12ம் தேதி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட இடையர்பாளையம், பூராண்டம்பாளையம், ஜல்லிப்பட்டி, சந்திராபுரம், லட்சுமிநாயக்‍கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

சூலூர் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட கருமத்தம்பட்டி, சாமளாபுரம், மாதப்பூர், சூலூர் உள்ளிட்ட இடங்களில் திரு.டிடிவி தினகரன், மே 13ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மே 14ம் தேதி, அரவக்‍குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட ஈசநத்தம், பள்ளப்பட்டி, க.பரமத்தி, தளவாபாளையம் உள்ளிட்ட இடங்களில் திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட புதுக்‍கோட்டை, கோரம்பள்ளம், தருவைக்‍குளம் உள்ளிட்ட இடங்களில் மே 15ம் தேதி திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்கிறார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட நிலையூர் கைத்தறி நகர், எஸ்.வி.என்.கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மே 16ம் தேதி திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தலைமைக்‍கழகம் அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00