திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு

Apr 24 2019 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் கோட்டை என்பதால், வெற்றி பெறுவது உறுதியென கழக வேட்பாளர் திரு. இ.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்‍கு கழக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. இ.மகேந்திரனுக்‍கு, கழக நிர்வாகிகள் ஆரத்து எடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த கழக வேட்பாளர் திரு. இ. மகேந்திரன், பின்னர் செய்தியார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படும் என்று கூறினார். திருப்பரங்குன்றம் தொகுதி அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் கோட்டை என்பதால், வெற்றி உறுதி என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, கழக வேட்பாளர் இ.மகேந்திரன் தலைமையில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யும் வகையில் வீடுவீடாக சென்று கழகத்தின் தேர்தல் அறிக்கை குறித்து எடுத்துரைத்தும், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத ஆட்சியின் செயல்பாடுகளை எடுத்துரைத்தும் வாக்குசேகரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் திரு. மனோகரன், அம்மா பேரவை செயலாளர் திரு.செல்வம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3014.00 Rs. 3223.00
மும்பை Rs. 3035.00 Rs. 3214.00
டெல்லி Rs. 3049.00 Rs. 3229.00
கொல்கத்தா Rs. 3049.00 Rs. 3226.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00