கழக வேட்பாளர்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவாக பிரசாரம் : செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Apr 16 2019 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள், தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன், உசிலம்பட்டி நகர பகுதிகளான அன்னமார்பட்டி, பங்களாமேடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் பரிசுபெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் திரு.இ.மகேந்திரன் உள்ளிட்ட கழகத்தினர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. புவனேஸ்வரனுக்‍கு ஆதரவாக, கழக மாவட்ட மகளிர் அணி சார்பில், மாவட்ட செயலாளர் திருமதி அந்தோணி கிரேசி தலைமையில் சுந்தரவேல்புரம் கிருஷ்ணராஜபுரம் பகுதிகளில் பெண்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் முனைவர் ஜோதிமணி, பூதாலபுரம், கந்தசாமிபுரம், ஜெகவீரபுரம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் திரு. ஜோதிமுருகனுக்கு ஆதரவாக, சண்முகபுரம், லட்சுமிபுரம் பகுதிகளில் கடைகள் மற்றும் வீடு வீடாகச் சென்று பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு கழகத்தினர் வாக்‍கு சேகரித்தனர். இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அரூர் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு.ஆர்.ஆர். முருகன், தொகுதிக்கு உட்பட்ட நாயக்கன்பட்டி, கத்திரிப்பட்டி, நடூர், நாட்டார் வழவு, நாகமங்கலம், நரிப்பள்ளி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.கழக நிர்வாகிகள் உடன் சென்று வாக்குகளை சேகரித்தனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. இ. லட்சுமணன், குறும்பனை உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களில் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மீனவர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களும் கழக வேட்பாளருக்‍கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ஜெங்கின்ஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

இதேபோல், கழக வேட்பாளர் திரு.இ.லட்சுமணனை ஆதரித்து, எஸ்,டி.பி.ஐ. கட்சியினர் நாகர்கோவிலில் ஜிம்.ஆ. பள்ளி வாசலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாம்மியர்களிடம் வாக்கு சேகரித்தனர். மணி மேடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர். கழக நிர்வாகிகள் ஏராளமனோர் உடன் சென்றனர்.

நெல்லை நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. மைக்கேல் ராயப்பன் பாளையங்கோட்டை தெற்குபஜாரில் உள்ள அழகுமுத்துகோன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மாரிதை செலுத்தி பின்னர் பிரச்சாரம் மேற்கொண்டார். நாரணம்மாள்புரம், குப்பக்குறிச்சி, பாலாமடை உள்ளிட்ட பகுதிகளில் வாக்‍கு சேகரித்தார். கழக நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

இதேபோல் நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. கல்லூர் இ.வேலாயுதம், நெல்லை மாநகர் மாவட்ட கழக பொருளாளர் பால்கண்ணன், தச்சநல்லூர் பகுதி கழக செயலாளர் பேச்சிமுத்து உள்ளிட்ட கழத்தினர் வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை கொக்கிரகுளம் பகுதியில் கழக வேட்பாளர் திரு. மைக்கேல்ராயப்பனை ஆதரித்து கழக நிர்வாகிகள் பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பகுதியில், பெரம்பலூர் கழக வேட்பாளர் திரு. ராஜசேகரனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. சேவகர் உள்ளிட்ட கழகத்தினர், கொசூர் ஊராட்சி, உப்பிலியப்பட்டி, வண்டியூர்,சுக்காம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. எம். ராமசாமி, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில், பரிசு பெட்டி சின்னத்திற்கு தெரு தெருவாக பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ். கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஏர்போர்ட், பொன்மலைப்பட்டி, பாரதி நகர், அன்னை நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நாடாளுமன்ற கழக வேட்பாளர் திருமதி சாருபாலா தொண்டமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பனையபுரம், கிளிக்கூடு, திருவளர்ச்சோலை, மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிகளில் கழக வேட்பாளர் திரு. சாருபாலா தொண்டைமானை ஆதரித்து, கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.மனோகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டாத்தூர், கூவத்தூர், இலையூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் முனைவர். ஆ.இளவரசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. எஸ். காமராஜ், கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராங்களில் வீதிவீதியாக சென்று பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்‍கு சேகரித்தார். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00