அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வேட்பாளர்கள் "பரிசுப் பெட்டகம்" சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் - செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள், பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு

Apr 16 2019 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வேட்பாளர்கள், வீதி வீதியாகச் சென்று பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர். செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள், அவர்களுக்‍கு உற்சாக வரவேற்பளித்தனர்.

சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. P.வெற்றிவேல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கழகத்தினருடன் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசார்பாடி, சத்தியமூர்த்தி நகர் குடிசை மாற்று வாரிய பகுதி, நேரு நகர், BV காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்‍கு சேகரித்தார். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி கூட்டணிக்‍ கட்சி வேட்பாளர் திரு. தெஹலான் பாகவி, கே.பி.பார்க், டி.கே.முதலி தெரு, ஆவரி சீனிவாசன் தெரு, ஆரிமுத்து தெரு, மோதிலால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு கோரினார். அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான தொண்டர்களும்,​ நிர்வாகிகளும் வாக்‍கு சேகரித்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திரு. தெஹலான் பாகவி, தோல்வி பயத்தால், அமமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளை திமுகவினர் தாக்குகின்றனர் என குற்றம்சாட்டினார்.

இதேபோல வடசென்னை மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. சந்தான கிருஷ்ணன், வியாசர்பாடி, சாமியார் தோட்டம், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தனர்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. பொன் ராஜா, ஆவடியை அடுத்த பட்டாபிராம், திருநின்றவூர், தண்டரை, சேக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று வெற்றி சின்னமாம் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.இ.லக்கி முருகன், ஆவடி நகர கழக செயலாளர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி உள்ளிட்ட கழகத்தினரும், SDPI கட்சியினரும் திரளாக உடன் சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00