பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு உதவமாட்டார்கள் - தேர்தல் பிரச்சார களத்தில் டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

Apr 16 2019 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு. நரேந்திர மோடியோ, காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தியோ, தமிழ் மக்‍களின் ஜீவாதார பிரச்னையான காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு உதவமாட்டார்கள் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திரு.டிடிவி தினகரன், காஞ்சிபுரம், தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் நேற்று, பொதுமக்‍களைச் சந்தித்து, வெற்றிச் சின்னமாம் "பரிசுப் பெட்டகம்" சின்னத்திற்கு பேராதரவு திரட்டினார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் திரு. A. முனுசாமியை ஆதரித்து, காஞ்சிபுரம் தேரடியில், பிரச்சாரம் மேற்கொள்ள, வருகை தந்த திரு. டிடிவி தினகரனுக்கு, பல்லாயிரக்‍கணக்‍கில் திரண்டிருந்த கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்‍களும், வாழ்த்து முழக்‍கங்ளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் பகுதிகளைத் தொடர்ந்து, திருப்போரூரில், காஞ்சிபுரம் நாடாளுமன்றம் தொகுதி கழக வேட்பாளர் திரு.முனுசாமி மற்றும் திருப்போரூர் சட்டமன்ற கழக வேட்பாளர் திரு. கோதண்டபாணி ஆகியோருக்‍கு ஆதரவாக திரு. டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார். 8 வழிச்சாலை நிச்சயம் அமைப்போம் என மத்திய அமைச்சர், எடப்பாடி பழனிசாமி முன்பே கூறுவதால், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்‍கு வந்தால் விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை நிச்சயம் அமைக்கும் என திரு. டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. இசக்கி சுப்பையாவை ஆதரித்து, மேடவாக்கம் பகுதியில் திரு. டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது, அங்கு கூடியிருந்த மக்‍களிடையே பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும், மோடி ஆட்சியையும் முடிவுக்‍கு கொண்டுவர தேர்தல் வந்துள்ளது என்றும், திமுக-வை சிறுபான்மையினர்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்றும் கூறினார்.

ஸ்ரீ பெரும்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. தாம்பரம் நாராயணனை ஆதரித்து, தாம்பரம் பகுதியில் திரு. டிடிவி தினகரன், பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்‍கு சேகரித்தார். அப்போது பொதுமக்‍களிடையே பேசிய அவர், மாண்புமிகு அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அமமுக பக்கம் உள்ளனர் என்றும், ஆளும் எடப்பாடி தரப்பில் டென்டர் பார்டிகள் மட்டுமே உள்ளனர் என்றும் விமர்சித்தார்.

கழக வேட்பாளர் திரு. தாம்பரம் நாராயணனை ஆதரித்து, பல்லாவரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட திரு. டிடிவி தினகரன், அங்கு குழுமியிருந்த பொதுமக்‍களிடையே உரையாற்றியபோது, தேசிய கட்சிகள் வேண்டாம் என மாண்புமிகு அம்மா முடிவு எடுத்தார்கள் என்றும், மோடியின் ஆட்சியில்தான் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்‍கின்றனர் என்றும் கூறினார். தமிழக மக்களை புறம்தள்ளுவதில் காங்கிரசும், பாஜக-வும் ஒன்றாக உள்ளதாக விமர்சித்தார்.

பல்லாவரத்திலிருந்து, ஆலந்தூர் செல்லும் வழியில், ரூபன் - சுசிலா ஆகிய தம்பதியனருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு லாசர் என திரு. டிடிவி தினகரன் என பெயர் சூட்டினார்.

ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்றம் தொகுதி கழக வேட்பாளர் திரு. தாம்பரம் நாரயணனை ஆதரித்து ஆலந்தூர் பகுதியில் பேசுவதற்கான நேரம் கடந்துவிட்டதால், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், அங்கு திரண்டிருந்த பொதுமக்‍களிடம், கை அசைத்தபடி ஆதரவு திரட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00