மதுரையில் அடிப்படை வசதிகள் செய்து தராத இபிஎஸ் அரசுக்கு கண்டனம் : வாக்காளர் அடையாள அட்டையை வீசி எறிந்த மக்கள்

Apr 15 2019 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், அடிப்படை வசதிகள் செய்துதராததைக்‍ கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாக்காளர் அடையாள அட்டையை, ஆட்சியர் அலுவலகத்தில் வீசி எறிந்ததால் பதற்றம் நிலவியது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட மங்கம்மாள் பட்டி கிராமத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பல லட்சம் மதிப்பில் அமைச்சர் R.B. உதயகுமாரால் ஆழ்துளை கிணறு அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், ஆழ்துளை கிணறு தோண்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்கள் கிராமத்தில், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதாக கூறி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், திட்டங்கள் எதுவும் செயல் படுத்தப்படாததை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், தங்களது வாக்காளர் அட்டையை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கச் சென்றனர். ஆனால், மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் தங்களை சந்திக்க மறுத்ததாகக் கூறி, ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக கிராம மக்கள் வாக்காளர் அடையாள அட்டையை எடுக்காததால், அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00