வரும் தேர்தலில் துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்திவிட்டு, மக்‍கள் மனங்களில் வாழும் அம்மாவின் உண்மையான வாரிசுகள் நாம்தான் என்பதை நிரூபிப்போம் - டிடிவி தினகரன் சூளுரை

Mar 18 2019 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் ஓராண்டை வெற்றிகரமாகக்‍ கடந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்‍கும் இந்த நேரத்தில், வரும் தேர்தலில் துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்திவிட்டு, மக்‍கள் மனங்களில் வாழும் புரட்சித் தலைவி அம்மாவின் உண்மையான வாரிசுகள் நாம்தான் என்பதை நிரூபிப்போம் - தரணிபோற்றும் வெற்றியைத் தேர்தலில் பெற்று, இதயதெய்வம் அம்மாவின் வழியில் தமிழகத்தைக்‍ காத்திட சூளுரைப்போம் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கழகத் தொண்டர்களைக்‍ கேட்டுக்‍கொண்டுள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், நம் ஒவ்வொருவரின் நெஞ்சத்திலும் தாயாக, தெய்வமாக நிறைந்து வாழும் புரட்சித் தலைவி அம்மாவின் நல்லாசியோடு, அம்மா வழி வந்த லட்சக்‍கணக்‍கான தொண்டர்கள் சூழ, நமது அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி, மதுரை மேலூரில் எத்தனையோ இன்னல்கள், இடையூறுகளை எல்லாம் சிங்கமென எதிர்கொண்டு, தன் உடல்நிலையைக்‍ கூட பொருட்படுத்தாமல், இந்த இயக்கத்தின் தொடக்‍கவிழாவைப் பிரம்மாண்டமாக நடத்திக்‍ காட்டிய தனது ஆருயிர் சகோதரர், மாவீரன் மேலூர் சாமியை இந்த நேரத்தில் நினைக்‍கும்போது இதயம் விம்முகிறது - மறைந்த மேலூர் சாமி போன்றோரின் அர்ப்பணிப்பு உணர்வில் ஆரம்பித்த நமது பயணம், ஒவ்வொரு நாளும் எழுச்சியோடு, வெற்றியை நோக்‍கிச் செல்வதற்கு கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரின் தியாகமும் உழைப்பும்தான் முதன்மையான காரணம் - பதவிக்‍கு, பணத்திற்கு அடிபணிந்து போகாமல், புரட்சித் தலைவி அம்மாவின் கனவுகளை நனவாக்‍கி, நாளைய தமிழகத்தின் வரலாற்றை எழுதப்போகின்ற லட்சியவாதிகளாக நீங்கள் செய்கின்ற தியாகங்கள் ஒருநாளும் வீண்போகாது -

அம்மாவின் மறைவுக்‍குப் பின்னர் தியாகத்தின் திருவுருவாம் சின்னம்மா, நமது இயக்‍கத்தை அகல்விளக்‍காக தனது கரங்களில் ஏந்தி, எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார் - ஆனால், உண்ட வீட்டுக்‍கே இரண்டகம் செய்த துரோகிகளிடம் நமது இயக்‍கமும், தமிழகமும் சிக்‍கிக் கொண்டன - உடல்நலன் குறைந்திருந்த நிலையிலும்கூட, ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு, தன் ரத்த வியர்வையை சிந்தி, இந்தியா எனும் மாபெரும் ஜனநாயக நாட்டின் 3வது பெரிய கட்சியாக அம்மா உருவாக்‍கிய இயக்‍கத்தையும், அம்மா கட்டிக்‍ காப்பாற்றிய தமிழகத்தின் உரிமைகளையும் துரோகிகள், டெல்லியின் காலடியில் கொண்டுபோய் போட்டபோது, நமது ரத்தம் கொதித்தது - இந்தியா இதுவரை கண்டிராத அந்த எதேச்சதிகாரிகளின் கட்டுப்பாட்டில் நமது இயக்‍கம் கொண்டுசெல்லப்பட்ட நேரத்தில், உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை நாடினோம் - நீதிமன்ற அறிவுறுத்தல்படி, நமது இயக்‍கத்தை துரோகிகளிடமிருந்து மீட்கும் வரையிலான ஏற்பாடாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் உதயமானது - எந்நாளும் நம் இதயத்தில் ஏற்றிப் பூஜிக்‍கும் அம்மாவின் திருவுருவத்தை தாங்கிய கொடியோடும், புனிதத் தாயின் கொள்கைகளோடும் களமிறங்கினோம் என திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மறையவில்லை - அமைப்பாக, ஆன்மாவாக நம்மோடுதான் வாழ்கிறார் என்பதற்கு சாட்சியாக அம்மாவின் 95 சதவிகிதத்திற்கும் மேலான தொண்டர்கள் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தில்தான் இருக்‍கிறார்கள் - அம்மாவின் வழியில், மக்‍களுக்‍காக நாம், மக்‍களோடு நாம் என்பதை நெஞ்சில் ஏந்தி, தமிழகம் தலைநிமிர, தமிழர் வாழ்வு மலர உழைத்துக் கொண்டிருக்‍கிறோம் - இந்த நேரத்தில் தீய சக்‍திகளையும் துரோகிகளையும் தேர்தல் களத்தில் சந்திக்‍கப்போகிறோம் - மெகா கூட்டணி என்ற பெயரில், நமது இதயதெய்வம் அம்மா மீது வன்மத்தை கக்கியவர்களை எல்லாம் சேர்த்துக்‍கொண்டு துரோகிகள் வருகிறார்கள் - நம் அம்மா மறைந்த பின்னரும் கூட, வன்மம் மாறாமல், அம்மாவுக்‍கு மணிமண்டபம் கட்டுவதை தடுப்பதற்காக வழக்‍கு போட்டவர்கள், அம்மாவை இழிவாகப் பேசி தமிழக சட்டப்பேரவையில் அம்மாவின் திருவுருவப் படத்தை வைக்‍கக்‍கூடாது என்று சொன்னவர்களுடன் துரோகிகள் கைகோர்த்திருக்‍கிறார்கள் -

மாண்புமிகு அம்மா எதிர்த்த மக்‍கள் விரோத திட்டங்களையெல்லாம் செயல்படுத்தி, தமிழகத்தை சூறையாடிக் ‍கொண்டிருப்பவர்களுடன் கூட்டு சேர்ந்து, நமது மாநிலத்தையே மொத்தமாக துடைத்தெறியும் சதித்திட்டத்தோடு தேர்தல் களத்திற்கு துரோகிகள் வருகிறார்கள் - தூத்துக்‍குடியில் அப்பாவி மக்‍கள் 13 பேர் காக்‍கை, குருவியைப் போல் சுட்டுக்‍ கொல்லப்பட்டபோது, கண்டுகொள்ளாத, கஜா புயலில் காவிரி டெல்டா மக்‍கள் சின்னாபின்னமானபோது, ஆறுதல்கூட தெரிவிக்‍க மனமில்லாத, தமிழக விவசாயிகள் டெல்லியில் தனது வீட்டு வாசலுக்‍கு வந்தபோது, அவர்களை பார்க்‍கக்‍கூட விரும்பாமல் விரட்டியடித்த பிரதமர் மோடியை, மீண்டும் பதவிக்‍கு கொண்டுவர துரோகிகள் துடிக்‍கிறார்கள் -

தமிழக மக்‍கள் துன்பத்தில் துவண்டபோதெல்லாம், தமிழ்நாட்டுப் பக்‍கமே எட்டிக்‍கூட பார்க்‍காத பிரதமர், இப்போது ஓட்டுக்‍காக வாரம் ஒருமுறை ஓடோடோடி வருகிறார் - இன்னொரு பக்‍கம் நாட்டை சுரண்டுவதை மட்டுமே நோக்‍கமாகக் கொண்ட, சுயநலத்தின் மொத்த உருவமான தி.மு.க., ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக காலந்தோறும் செய்துவந்த பச்சோந்திதனங்கள் ஒன்றா? இரண்டா? -

தேசிய அளவில் என்ன நடக்‍கிறது என்றே தெரியாமல் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்‍கிறார் ஸ்டாலின் - அதற்கு முன்பாக, பாரதிய ஜனதாவுடன் எப்படியாவது நெருக்‍கத்தை ஏற்படுத்திக்‍கொள்ளவேண்டும் என துடித்தவர்தான் இந்த ஸ்டாலின் - ஆனால், தீய சக்‍திகளின் பொய் வழக்‍கில் இன்னலைச் சந்திக்‍க வேண்டிய நிலைமை ஏற்பட்டபோதும்கூட, அதனை சட்டத்தின் வழியில்தான் நமது தியாகத்தலைவி சின்னம்மா எதிர்கொண்டு வருகிறார் - மாண்புமிகு அம்மா கற்றுத்தந்த அஞ்சாமையோடு எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்‍கப் போராடுகிறோம் -

அம்மாவின் ஆசிகள் நமக்‍குத்தான் இருக்‍கிறது என்பதை உறுதிப்படுத்தி, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மக்‍கள், அடுத்த அத்தியாயத்தை எழுத தயாராக இருக்‍கிறார்கள் - தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வரலாற்றில் புதிய மாற்றத்தை, வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், 19 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் மக்‍கள் உருவாக்‍கப்போகிறார்கள் - துரோகத்திற்கும் சுயநலத்திற்கும் முடிவுரை எழுதப்போகிறார்கள் - காலம் வழங்கியிருக்கும் பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி மக்‍களின் அன்பையும் ஆசியையும் பெறுவோம் - நெருப்பாகவும் துடிப்பாகவும் கழகப் பணிகளை ஆற்றிவரும் நமது முழுக்‍கவனமும் தேர்தல் களத்தில் இருக்‍கட்டும் - வரும் தேர்தலில் துரோகிகளையும், எதிரிகளையும் வீழ்த்திவிட்டு, மக்‍கள் மனங்களில் வாழும் புரட்சித் தலைவி அம்மாவின் உண்மையான வாரிசுகள் நாம்தான் என்பதை நிரூபிப்போம் - இந்த சூளுரையோடு கழகத்தின் 2ம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் என்று, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00