பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்‍கள் - ஆளுங்கட்சி பிரமுகர் பார் நாகராஜனுக்‍கு தொடர்பிருப்பது அம்பலம்

Mar 14 2019 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தை குலைநடுங்க செய்துள்ள நிலையில், நாளுக்‍குநாள் புதிய வீடியோக்‍கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், ஆளுங்கட்சி பிரமுகரும், அமைச்சரின் நெருங்கிய நண்பருமான பார் நாகராஜனின் தொடர்பும் அம்பலமாகியுள்ளது.

பொள்ளாச்சி சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் வலுக்‍கட்டாயமாக வந்து பேட்டியளித்தார். சம்பவத்தில் 4 பேருக்‍கு மட்டுமே தொடர்பு இருப்பதாகவும், அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், புதுப்புது வீடியோக்‍கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. அதன் மூலம், ஆளுங்கட்சி பிரமுகரும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பருமான பார் நாகராஜனுக்‍கு சம்பவத்தில் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 4 பேர் மட்டுமே தொடர்பு இருப்பதாக கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கூறியிருந்தார். அவர், இதுபோல கூறியதற்கு என்ன காரணம் என்றும், யாரை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்‍கை என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00