மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி தேர்தலை ஒத்தி வைக்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு

Mar 14 2019 6:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி, தேர்தலை ஒத்தி வைக்க தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

சித்திரை திருவிழாயொட்டி மதுரை நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்‍கு நீதிபதிகள் திரு.கிருபாகரன், திரு.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு, கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையரிடம் கலந்து ஆலோசித்த பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாகவும், திருவிழா நடைபெறவுள்ள 59 வாக்குச்சாவடிகளிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தார். திருவிழாவையொட்டி, வாக்குப்பதிவிற்கு கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்குவதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்காத நீதிபதிகள், மதுரைக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைப்பது சிரமம் என்றால் தமிழகம் முழுவதும் தேர்தலை ஒத்தி வைக்கலாமே என கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00