ஆஷஸ் கடைசி டெஸ்ட் - இங்கிலாந்து வெற்றி 2-2 என தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

Sep 16 2019 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கடைசி ஆஷஸ் டெஸ்ட் ஆட்டம் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 294 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, ஜோ டென்லி மற்றும் பென் ஸ்டோக்ஸின் அபார ஆட்டத்தால் வலுவான முன்னிலைப் பெற்றது. 2வது இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து 2வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் மேத்யூ வேட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 117 ரன்களை எடுத்த அவர் ஜோ ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் 263 ரன்களில் அனைத்து விக்‍கெட்டுகளையும் இழந்த நிலையில், 135 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடரை 2-2 என இங்கிலாந்து சமன் செய்தது. 1972-க்குப் பிறகு ஆஷஸ் தொடர் சமனில் முடிவது இதுவே முதன்முறையாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00