குடியரத்தலைவர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு பிறந்த கிராமத்திற்கு தற்போதுவரை மின் இணைப்பு இல்லை? : மின் இணைப்பு வழங்கும் பணி மும்முரம்

Jun 27 2022 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரத்தலைவர் தேர்தலில், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் திருமதி. திரௌபதி முர்மு பிறந்த ஒடிஷா மாநிலத்தின் உபர்பேடா கிராமத்தில் போர்க்‍கால அடிப்படையில் மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

பா.ஜ.க. கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திருமதி. திரௌபதி முர்மு, கடந்த 24-ம் தேதி வேட்பு மனு தாக்‍கல் செய்தார். பின்னர் காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத் பவார், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் செல்லி மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை தொலைபேசியில் அழைத்து அவர் ஆதரவு கோரினார். இந்நிலையில், வரும் ஒன்றாம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதனிடையே, திருமதி. திரௌபதி முர்மு பிறந்த ஒடிஷா மாநிலத்தின் உபர்பேடா கிராமத்தில் போர்க்‍கால அடிப்படையில் மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. திருமதி. திரௌபதி முர்மு, ஒடிஷாவில் கவுன்சிலர், எம்.எல்.ஏ., அமைச்சர் என பல பதவிகளை வகித்த போதும், அவரது பிறந்த ஊருக்‍கு இதுவரை மின்சார இணைப்பு இல்லை. தற்போது திருமதி. திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராகி இருப்பதால், அவர் பிறந்த கிராமத்திற்கு ஒடிஷா அரசு மின் இணைப்பு வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00