உலக பாரா பேட்மிண்டன் தொடரில் தங்கம் வென்று சத்தமில்லாமல் சாதனை புரிந்த மானஸி ஜோஷி

Sep 4 2019 9:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை மிகவும் பெருமைப்படுத்திய வேளையில், உலக பாரா பேட்மிண்டன் தொடரில், சத்தமின்றி சாதனை புரிந்துள்ளார் மானஸி ‍ஜோஷி.

சுவிட்சர்லாந்தில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்த‌ போது, உலக பாரா ‍பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரும் நடந்தது. அத‌ில், குஜராத் மாநிலம், ராஜ்கோட்டைச் சேர்ந்த, மானஸி ஜோஷி பங்கேற்று, இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று தந்துள்ளார். பி.வி.சிந்து தங்கம் வெல்வதற்கு முன்பே, மானஸி ஜோஷி சத்தமில்லாமல் தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். கணினி பொறியாளரான மானஸி ஜோஷி, 2011 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் தனது இடது காலை இழந்தார். சிறுவயதிலே பேட்மிண்டன் போட்டியில் சிறந்து விளங்கிய மானஸி, ஒரு கா‌லை இழந்த போதும் செயற்கைக்கால் பொருத்தி பேட்மிண்டன் போட்டிகளில் பங்‍கேற்றார். 2014 ஆம் ஆண்டில், பாரா ஆசிய போட்டிகளில், மானஸி ஜோஷி பங்கேற்றார். அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் வெண்கலம், வெள்ளி போன்ற பதக்கங்கள் கிடைத்தாலும், தங்கப் பதக்கம் வாங்க முடியவில்லையே என்ற ஏக்கம், மானஸி ஜோஷியின் மனதில் இருந்தது. இதை, அண்மையில் நடைபெற்ற உலக பாரா பேட்மிண்டன் தொடரில் நி‌றைவேற்றி நம் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00