வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

Aug 12 2019 7:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி ஏற்கெனவே 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பின்னர் இந்தியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில், முதலாவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகளும் மோதிய 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சிறப்பாக ஆடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள்அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கிய போது, மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 270 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00