வெஸ்ட் இண்டீசுக்‍கு எதிரான 3-வது இருபது ஓவர் கிரிக்‍கெட் போட்டி - இந்தியா 7 விக்‍கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Aug 7 2019 9:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
வெஸ்ட் இண்டீசுக்‍கு எதிரான 3-வது இருபது ஓவர் கிரிக்‍கெட் போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் அமெரிக்காவில் நடைபெற்றன. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், 3-வது இருபது ஓவர் போட்டி கயானாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில், 6 விக்‍கெட் இழப்புக்‍கு 146 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 58 ரன்கள் குவித்தார்.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்‍குடன் களமிறங்கிய இந்திய அணி, 3 விக்‍கெட்டுகள் இழப்புக்‍கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷப் பந்த் 65 ரன்களும், கேப்டன் கோலி 59 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்‍கில் கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00