வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் - 2வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா

Aug 5 2019 6:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது.

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர். ஷிகர் தவான் 23 ரன்னிலும், சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 67 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 167 ரன்களை எடுத்தது.

168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர், இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். இதனிடையே, 15-வது ஓவரில் மோசமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இறுதியில், இந்திய அணி டக்வர்த் லீவிஸ் முறைப்படி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில், இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00