இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : ட்ராவிஸ் ஹெட், ஸ்மித் அபார ஆட்டம் - முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
Jun 8 2023 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா, டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 43 ரன்களிலும், மார்னஸ் லபுஷேன் 26 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் - ட்ராவிஸ் ஹெட் இணை இந்திய வீரர்களின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. அசத்தலாக விளையாடிய ட்ராவிஸ் ஹெட் சதம் விளாசி அசத்தினார். ஸ்மித் அரைசதம் கடந்தார். இவ்விருவரின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ட்ராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 4வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு இவ்விருவரும் 251 ரன்கள் குவித்து அசத்தியுள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.