சென்னையில் நடைபெறும் அத்லெட்டிக் பிரிமியர் லீக் : திருவான்மியூர் கடற்கரையில் நடந்த முன்னோட்ட நிகழ்வு
Jul 3 2022 1:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் நடக்க இருக்கும், அத்லெட்டிக் பிரிமியர் லீக்குக்கான முன்னோட்ட நிகழ்வு திருவான்மியூர் கடற்கரையில் இன்று நடைபெற்றது.
சென்னை அத்லெட்டிக் பிரீமியர் அசோசியேசன் சார்பில், வரும் 24-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கிரிக்கெட், பந்து எறிதல், போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதில் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொள்கின்றனர். 4 வயதில் இருந்து 17வயது வரை உள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்ட நிகழ்வு திருவான்மியூர் கடற்கரையில் இன்று நடைபெற்றது.